வாசில் வெர்கோவினெட்ஸ்
வாசில் மைகோலயோவிச் வெர்கோவினெட்ஸ் (1880 - 1938) என்பவர் ஒரு உக்ரேனிய நடிகர், இசை நிகழ்ச்சி நடத்துனர், இசையமைப்பாளர், குரலிசை ஆசிரியர், பாலே நடன ஆசிரியர், நடன இயக்குநர் மற்றும் நடன இனவியலாளர் என பல்வேறு திறமை கொண்டவராவார், உக்ரேனிய பாரம்பரிய நடனங்கள் மற்றும் அதன் உத்திகளை பற்றி உக்ரேனின் பல்வேறு கிராமங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் எழுத்துப்படிகளைப் பதிவு செய்துள்ளார். மேலும் மேடைகளில் நடனம் அமைக்கும் முறை மற்றும் உக்ரேனிய நாட்டார் நடன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் தலைமுறைகளை நவீனப்படுத்துவது, அதன் வழியே அந்த நடனங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவது போன்ற பல்வேறு செயல்களை செய்துள்ளார். அவர் ஹோபக் என்ற உக்ரேனிய பாரம்பரிய நடனத்தை நவீனமாக்கி அதை பரப்பி வருகிறார்.
வாசில்' வெர்கோவினெட்ஸ்'ன் இயற்பெயர் வாசில் கோஸ்டிவ் என்பதாகும். அவர் ஜனவரி 5, 1880 அன்று டோலினா நகரத்திற்கு அருகிலுள்ள மைசூன் என்ற கிராமத்தில் பிறந்தார்.
1906 ம் ஆண்டில் அவர் உக்ரேனிய நாடக மேதையான மைகோலா சடோவ்ஸ்கியைச் சந்தித்தார். மைகோலா சடோவ்ஸ்கி உக்ரேனிய சமூக நாடகத்தின் நிறுவனர்களில் ஒருவர். மைகோலா சடோவ்ஸ்கி தான் வாசில் கோஸ்டிவுக்கு "வெர்கோவினெட்ஸ்" என்ற புனைப்பெயரை வழங்கினார்.[1]
மேற்கோள்கள்
தொகுஆங்கிலத்தில்:
- ஷதுல்ஸ்கி, மைரான் (1980). உக்ரேனிய நாட்டுப்புற நடனம், கோப்சார் பப்ளிஷிங் கோ. லிமிடெட்.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9692078-5-9 .
- செரெபெக்கி, போஹ்டான் (1985). உக்ரேனிய நடன வள புத்தக புத்தகங்கள், தொடர் I-IV, உக்ரேனிய கனடியன் குழு, சஸ்காட்செவான் மாகாண சபை.
உக்ரேனிய மொழியில்:
- அவ்ரமென்கோ, வாசில் (1947). உக்ரேனிய தேசிய நடனங்கள், இசை மற்றும் ஆடைகள், தேசிய வெளியீட்டாளர்கள், லிமிடெட்.
- ஹுமெனியுக், ஆண்ட்ரி (1962). உக்ரேனிய நாட்டுப்புற நடனம், அறிவியல் அகாடமி உக்ரேனிய SSR.
- ஹுமெனியுக், ஆண்ட்ரி (1963). உக்ரைனின் நாட்டுப்புற நடனக் கலை, உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு இன் அறிவியல் அகாடமி.
- வெர்கோவினெட்ஸ், வாசில் (1912). உக்ரேனிய திருமணம் .
- வெர்கோவினெட்ஸ், வாசில் (1919). உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு .
- வெர்கோவினெட்ஸ், வாசில் (1925). உக்ரைனின் வெஸ்னியானோச்கா மாநில வெளியீட்டாளர்கள்.
- வெர்கோவினெட்ஸ், யாரோஸ்லாவ் (1963). உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு, சித்திரக் கலை மற்றும் இசை இலக்கியத்தின் மாநில வெளியீட்டாளர்கள் மூன்றாம் பதிப்பில் வாசிலின் வெர்கோவினெட்ஸ் வாழ்க்கை வரலாறு.