வாசுகி சரக்கு தொடருந்து
சூப்பர் வாசுகி (Super Vasuki) 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி இந்திய இரயில்வே இயக்கிய மிக நீளமான சரக்குத் தொடருந்து ஆகும். தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் கீழ் இயங்கும் வாசுகி சூப்பர் சரக்கு தொடருந்து, 3.5 கிலோ மீட்டர் நீளம், ஆறு என்ஜின்கள், 295 சரக்குப் பெட்டிகளுடன் சுமார் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, 15 ஆகஸ்டு 2022 அன்று, கோர்பா - நாக்பூர் இடையே 267 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. [1][2][3][4]சூப்பர் வாசுகி சரக்கு ரயிலில் ஏற்றப்படும் நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். [5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Railways tests longest freight train on Independence Day
- ↑ Super Vasuki: India’s Longest and heaviest freight train
- ↑ All about Super Vasuki - India's longest & heaviest freight train with 6 engines, 295 wagons
- ↑ 3.5 கி.மீ நீள சரக்கு ரயில்: இந்தியா அடுத்த சாதனை
- ↑ சூப்பர் வாசுகி:3.5 கி.மீ நீளம்; 27,000 டன் கொள்ளளவு; இந்தியாவின் மிகப் பெரிய சரக்கு ரயில் இதுதான்!