75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா (75th Anniversary of Indian Independence or Azadi Ka Amrit Mahotsav), இந்தியா விடுதலை அடைந்த 75வது ஆண்டு நாளை 12 மார்ச் 2021 முதல் 15 ஆகஸ்டு 2023 முடிய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முழுவதும் திருநாளாகக் கொண்டாட இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது.[1][2].[3][4] இத்திருநாளை கொண்டாடும் வகையில் 15 ஆகஸ்டு 2022 அன்று இந்தியாவின் 3.5 கிலோ மீட்டர் நீளமான வாசுகி சூப்பர் சரக்கு தொடருந்து வெள்ளோட்டம் விட்டு இந்திய இரயில்வே சாதனை படைத்தது.[5][6]
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா Azadi Ka Amrith Mahotsav 75th Anniversary of Indian Independence | |
---|---|
கடைபிடிப்போர் | இந்தியா |
முக்கியத்துவம் | இந்தியாவின் 75வது விடுதலை நாளை நினைவு கூர்தல் |
கொண்டாட்டங்கள் | தேசியக் கொடி ஏற்றுதல், அணி வகுப்பு மரியாதை, வாண வேடிக்கைகள், தேச பக்தி பாடல்களை பாடுதல் மற்றும் நாட்டுப் பண் இசைத்தல், இந்தியப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பேச்சு |
தொடக்கம் | 12 மார்ச் 2021 |
முடிவு | 15 ஆகஸ்டு 2023 |
நாள் | 15 ஆகஸ்டு 2022 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 15 ஆகஸ்டு 1947 (75 ஆண்டுகளுக்கு முன்னர்) |
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி இந்தியா முமுவதும் வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்ற இந்தியப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.[7] அஞ்சலகம் உட்பட பல இடங்களில் தேசியக் கொடி ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்பட்டது.[8]
சுருக்கம்
தொகு75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவிற்கு இந்திய அரசு ஐந்து மையக் கருத்துக்கள் கொண்டுள்ளது.[9] அவைகள்:
- இந்திய விடுதலை இயக்கம்:இது பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய போராடிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை மையப்படுத்தி கொண்டாடுகிறது. இந்த கருப்பொருளின் கீழ் உள்ள நிகழ்ச்சிகளில் பிர்சா முண்டா பிறந்த நாள், நேதாஜி அறிவித்த சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் பிரகடனம் போன்றவை அடங்கும்.
- கருத்துக்கள்@75: இந்த கருத்து, இந்தியாவை இதுவரை வடிவமைத்த மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (இந்தியாவின் 100வது சுதந்திர நாள் வரை, என பெயரிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.
- தீர்வு@75: இது இந்தியாவின் தலைவிதியை வடிவமைப்பதற்கான கூட்டுத் தீர்மானம் மற்றும் உறுதியின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த கருப்பொருளின் கீழ் நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியலமைப்பு நாள், நல்லாட்சி வாரம் போன்ற முன்முயற்சிகள் அடங்கும்.
- செயல்கள்@75: இது உலக அளவில் இந்தியாவைச் செதுக்குவதற்கு அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் கவனம் செலுத்துகிறது. இதற்கு ஒரு பொன்மொழி உள்ளது: சப்கா சாத். சப்கா விகாஸ். சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ். இதன் கீழ் உள்ள நிகழ்வுகள் மற்றும் முன்முயற்சிகளில் கதி சக்தி - மல்டி-மாடல் இணைப்புக்கான தேசிய மாஸ்டர் பிளான், பெண்கள் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கான ஒரு முன்முயற்சி போன்றவை அடங்கும்.
- சாதனைகள்@75: இந்தியாவின் பண்டைய வரலாற்றிலிருந்து இன்றைய 75 வருட சுதந்திர நாடு வரை அடையப்பட்ட அனைத்து மைல்கற்கள் மற்றும் கூட்டு சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.[9], namely:
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "75 weeks ahead of 75th Independence Day, PM Modi launches Amrit Mahotsav: Highlights". The Times Of India. 12 March 2021. பார்க்கப்பட்ட நாள் 12 September 2021.
- ↑ "PM inaugurates the curtain raiser activities of the 'Azadi Ka Amrit Mahotsav' India@75". Prime Minister's Office. 12 Mar 2021. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2022.
- ↑ "Ministry of Culture to celebrate one year of Azadi Ka Amrit Mahotsav". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
- ↑ "Independence Day live updates: India celebrates 76th Independence day". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ Railways tests longest freight train on Independence Day
- ↑ Super Vasuki: India’s Longest and heaviest freight train
- ↑ 75வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு தயார்: வீடு தோறும் தேசிய கொடியேற்ற மக்கள் எழுச்சி!
- ↑ Kulkarni, Sneha. "Har Ghar Tiranga Campaign: How to buy National flag online on India Post, process, cost". The Economic Times. https://economictimes.indiatimes.com/wealth/save/har-ghar-tiranga-campaign-how-to-buy-national-flag-online-on-india-post-process-cost/articleshow/93455583.cms.
- ↑ 9.0 9.1 Mahotsav, Amrit. "Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)