வாசோனைட்டு
வாசோனைட்டு (Wassonite) என்பது TiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம். [1][3] தைட்டானியம் சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய வகை கனிமம் ஆகும். இக்கனிமத்தின் கண்டுபிடிப்பு "யமடோ 691" என்று அழைக்கப்படும் மெக்னீசியம் சிலிக்கேட்டு எரிகல்லாலான ஒரு விண்வீழ்கல்லுக்குள் சிறிய மணிகளாக இருந்ததாக 2011ஆம் ஆண்டு நாசா செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு சப்பானியரின் அண்டார்டிகா பயணத்தின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது. [4] தைட்டானியம்(II) சல்பைடு என்ற செயற்கைத் தயாரிப்பு வேதிச் சேர்மம் முதன் முதலாக இயற்கையில் காணப்பட்டதாக இக்கண்டுபிடிப்பால் உணரப்பட்டது.
வாசோனைட்டு Wassonite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | TiS |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மேற்கோள்கள் | [1][2] |
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த யான் டி வாசன் நினைவாக கனிமத்திற்கு வாசோனைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் கழகமும் இப்பெயரை அங்கீகரித்தது.[5][6]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வாசோனைட்டு கனிமத்தை Was[7] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat.org
- ↑ Mineralienatlas
- ↑ Dwayne C. Brown; William Jeffs (2011-04-05). "Scientists Find New Type Of Mineral In Historic Meteorite". NASA. பார்க்கப்பட்ட நாள் 2011-04-07.
- ↑ Bryner, Jeanna (2011-04-06). "4.5-Billion-Year-Old Antarctic Meteorite Yields New Mineral". LiveScience. பார்க்கப்பட்ட நாள் 2011-04-07.
- ↑ "Scientists Find New Type of Mineral in Historic Meteorite". Science Daily. 2011-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-04-07.
- ↑ Nakamura-Messenger, K., Clemett, S.J., Rubin, A., Choi, B.-G., Keller, L.P., Zhang, S., Rahman, Z. and Oikawa, K. (April 2011). "Wassonite, IMA 2010-074". CNMNC Newsletter (8): 293.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.