வாடா தாலுகா

வாடா தாலுகா (Wada taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 2 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 168 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வாடா தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 178,370 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 91,990 மற்றும் 86,380 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 24120 - 14% ஆகும். சராசரி எழுத்தறிவு 73.02% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 4,482 மற்றும் 1,01,709 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.11%), இசுலாமியர்கள் 3.27%, பௌத்தர்கள் 1.23% மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடா_தாலுகா&oldid=3782770" இலிருந்து மீள்விக்கப்பட்டது