வாடிவாசல்

வாடிவாசல் (vadi vasal) என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும். மாடுபிடி வீரர்கள் வாடிவாசலைப் பார்த்தபடியே இருப்பர். ஆனால் சில ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் வாடிவாசல் இல்லாமல் நாலாப்பக்கங்களிலிருந்தும் மாடுகளைத் திறந்து விடும் வழக்கமும் உள்ளது. எந்தப் பக்கத்திலிருந்து காளை பாயப் போகிறது என்றே தெரியாது.

வாடிவாசல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு சி. சு. செல்லப்பா ஒரு நாவல் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடிவாசல்&oldid=968840" இருந்து மீள்விக்கப்பட்டது