எழினியாதன்

(வாட்டாற்று எழினியாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எழினியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படுகிறான்.
வேளிர் குடியைச் சேர்ந்தவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் வாட்டாறு என்னும் ஆற்றங்கரையில் இருந்த வாட்டாறு என்னும் ஊரில் வாழ்தவன்.
இப்பகுதியில் இவனுக்குப் பின்னர் பறம்பு மலைப் பகுதியில் இருந்துகொண்டு ஆண்ட அரசவள்ளல் பாரியும் வேளிர்குடியைச் சேர்ந்தவன். கோசர்குடி மக்கள் இவ்வூரை வளமாக்கி மகிழ்ந்தனர்.

எழினியாதன்
வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படும் இவன் வென்வேல் வேள் எனப் போற்றப்படுகிறான். இவன் உள்ளத்தில் ஊக்கம் இல்லாத பயந்தாங்கொள்ளிகளுக்கு வலிமை தந்து நிற்பானாம். உறவினர் இல்லாத அனாதைகளுக்கு உறவினனாய் விளங்குவானாம்.[1]
எழினியாதன் புலவரைப் போற்றிய பாங்கு
கறிவறுவல், நனைமட்டு என்னும் தேறல், முயல்கறி, நெய்ச்சோறு ஆகியவற்றை வழங்குவானாம். நெல் நிறைந்திருக்கும் கூட்டைத் திறந்து விட்டு அள்ளிக்கொள்ளுங்கள் என்று மூடாமல் விட்டுவிடுவானாம். வானத்து மீன்களுக்கு நடுவில் இருக்கும் நிலாப் போல நின்றுகொண்டு அணிகலன்களை அள்ளித் தருவானாம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 396
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழினியாதன்&oldid=2566229" இலிருந்து மீள்விக்கப்பட்டது