வாணிலாயிடு
வாணிலாயிடுகள் (Vanilloids) என்பவை வாணிலில் குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். வாணிலில் ஆல்ககால், வாணிலின், வாணிலிக் அமிலம், அசிட்டோ வாணிலின், வாணிலின்மாண்டலிக் அமிலம், ஓமோவாணிலிக் அமிலம், கேப்சைசின் போன்றவை வாணில் லாயிடுகளில் அடங்கும். மாற்றியங்கள் ஐசோவாணிலாயிடுகள் எனப்படுகின்றன.
அதிக வெப்பநிலை மற்றும் அமில pH போன்ற தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களுக்கு இயற்கையாகவே பதிலளிக்கும் பல வாணிலாயிடுகள் குறிப்பாக கேப்சைசின், நிலையற்ற ஏற்பித் திறன் வாணிலாய்டு வகை 1 ஏற்பியுடன் பிணைக்கிறது.[1] காரமான மிளகுத்தூள் சாப்பிட்ட பிறகு ஏற்படும் எரியும் உணர்வுக்கு இந்த நடவடிக்கை காரணமாகும். நிலையற்ற ஏற்பித் திறன் வாணிலாய்டு வகை 1 ஏற்பியைத் தூண்டும் உள்ளார்ந்த முறையில் உருவாகும் வேதிப்பொருள்கள் எண்டோவாணிலாயிடுகள் எனப்படுகின்றன.[2] ஆனந்தமைடு, 20-ஐதராக்சியிகோசாட்ரேனோயிக் அமிலம்,[3] என்-அராச்சிடோனாயில் டோபமைன் மற்றும் என்-ஒலியாயில்-டோபமைன் உள்ளிட்டவையும் எண்டோவாணில்லாயிடுகள் எனப்படுகின்றன. [4]
கொழுப்பு அமிலம் அமைடு ஐதரோலேசு எண்டோவாணில்லாயிடுக்கான ஒரு முக்கியமான நொதியாகும். N-அசைலெத்தனோலமைன்கள், நிலையற்ற ஏற்பித் திறன் வாணிலாய்டு வகை 1 ஏற்பியில் வளர்ச்சிதைமாற்றம், பிற கன்னாபினாய்டு ஏற்பிகள் ஆகியவற்றுக்கும் கொழுப்பு அமிலம் அமைடு ஐதரோலேசு முக்கியமான நொதியாக உள்ளது.[5]
உணவுத் தொழிலுக்கு வெளியே நோனிவாமைடு போன்றவாணிலாயிடுகள் வணிகரீதியாக மிளகுத் தெளிப்பு கலவைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
நிலையற்ற ஏற்பித் திறன் வாணிலாய்டு வகை 1 ஏற்பியுடன் செயல்படும் மற்ற வாணிலாயிடுகளில் ரெசினிஃபெராடாக்சின் மற்றும் ஓல்வானில் ஆகியவை அடங்கும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pingle, SC; Matta, JA; Ahern, GP (2007). Capsaicin receptor: TRPV1 a promiscuous TRP channel. Handbook of Experimental Pharmacology. Vol. 179. pp. 155–171. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-34891-7_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-34889-4. PMID 17217056.
- ↑ Van Der Stelt M, Di Marzo V (2004). "Endovanilloids. Putative endogenous ligands of transient receptor potential vanilloid 1 channels.". Eur J Biochem 271 (10): 1827–34. doi:10.1111/j.1432-1033.2004.04081.x. பப்மெட்:15128293.
- ↑ Hamers A, Primus CP, Whitear C, Kumar NA, Masucci M, Montalvo Moreira SA (2022). "20-hydroxyeicosatetraenoic acid (20-HETE) is a pivotal endogenous ligand for TRPV1-mediated neurogenic inflammation in the skin.". Br J Pharmacol 179 (7): 1450–1469. doi:10.1111/bph.15726. பப்மெட்:34755897.
- ↑ De Petrocellis L, Chu CJ, Moriello AS, Kellner JC, Walker JM, Di Marzo V (2004). "Actions of two naturally occurring saturated N-acyldopamines on transient receptor potential vanilloid 1 (TRPV1) channels.". Br J Pharmacol 143 (2): 251–6. doi:10.1038/sj.bjp.0705924. பப்மெட்:15289293.
- ↑ Silva, M.; Martins, D.; Charrua, A.; Piscitelli, F.; Tavares, I.; Morgado, C.; Di Marzo, V. (2016-08-01). "Endovanilloid control of pain modulation by the rostroventromedial medulla in an animal model of diabetic neuropathy" (in en). Neuropharmacology 107: 49–57. doi:10.1016/j.neuropharm.2016.03.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-3908. பப்மெட்:26965218. https://www.sciencedirect.com/science/article/pii/S002839081630079X.
- ↑ Carlson, Neil R.; Birkett, Melissa A. (2017). Physiology of Behavior (12 ed.). Pearson. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780134320823.