வாதரவத்தை

புத்தூர் அருகே வாதரவத்தை “கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு” எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி “கம்யூன்”. இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை  “கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு” என பெருமையாக சொல்கிறார்கள்.  விடுதலைப் புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.

13818-2-696x264.png

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி  “சீவலப்பேரிபாண்டி” கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும்  உண்டு, உறங்கி தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்துஉணரலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு மக்களை அரவணைத்து மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தார்கள் என்பதற்கு வாதரவத்தை அக்காச்சி எழுச்சி குடியிருப்பு இன்று சான்று பகிர்கிறது.

அக்காச்சி எழுச்சி குடியிருப்பு  என்று  ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கம் பெற்றது எப்படி என்று  அந்த  கிராமத்தின் மூத்த பிரஜை ஒருவர்  இவ்வாறு விபரிக்கிறார்.

“அக்காச்சி” என்பவர் நீர்வேலியை சேர்ந்தவர். இந்த  கிராமத்திலே முக்கியமாக இராணுவத்திற்கு பயந்து தமிழீழ விடுதலை புலிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலம் .

அந்த காலத்திலே அக்காச்சி என்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர், அவர் எமது கிராமத்திற்கு  அடிக்கடி வருவார் .

அந்த காலம் இந்தியன் ஆமிட காலம், இந்தியன் ஆமி வரும் போது எங்கட  சேட்டு எடுத்து போடுவார். எங்களோடையே நின்டு தோட்ட வேலைகள் செய்வார். எங்களோடையே இருந்து வெற்றிலை சாப்பிடுவார்.

எங்கட கிராமத்தில  என்ன  பிரச்சனை  நடந்தால்கூட, இங்கே மட்டுமல்ல வாதரவத்தை, வீரவாணி போன்ற ஏனைய பகுதியிலும் ஏதும் பிரச்சனைகள்  நடந்தால் முன்னுக்கு நின்று பிரச்சனைகளை  தீர்த்து வைப்பார், என்ன உதவிகள் என்றாலும் எங்களுக்கு செய்து தருவார்.

அவர் எங்கட இந்த வாதரவத்தை கிராமத்தில இருந்து அரசியல்   பணி செய்துதான், எங்களுக்கு இப்ப இருக்கிற வீட்டுத்திட்டங்கள்அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கட்டித் தரப்பட்டது.

இந்த வீட்டு திட்டத்தை விடுதலைப்புலிகளில் பிரதிதலைவரா இருந்த  மாத்தையா அவர்கள் தான்  திறந்து வைத்தவர். அது பெரிய ஆடம்பரம்  என்று  சொல்ல முடியாது

குடியிருப்பு திறக்கப்படும்போது யாழ்பாணம், நீர்வேலி ,ஆவரங்கால் அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து எல்லாம் இந்த  நிகழ்வுக்கு மக்கள்  வந்தனர்.

இங்கே அரசியல் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கட  வீட்டுக்கு பக்கத்தில ஒரு  வேம்புமரம்  நிண்டது, அதுல எந்த  நேரமும் புலிக்கொடி   பறக்கும்.

ஒருநாள் இந்தியன் ஆமி கப்பூதால வந்து வாதரவத்தைக்கு போய்க்கொண்டு இருந்தவங்கள், அப்போது இந்தியாவில இருந்து நெடுமாறன்  ஐயா அவர்கள் வந்திருந்தவர். அப்ப இந்தியன் ஆமி,  எங்கட  ஊருக்கு மேற்கு   பக்கம் ஒரு கட்டு  இருந்தது , அதால  போவாங்கள், அக்காச்சி அண்ணாக்கள்   பெரிய ஆயுதங்களோட நின்டிச்சினம். “நாங்க விடமாட்டம், அப்பிடி வந்தால்  நாங்க சாகுவம். நீங்க பயப்பட  தேவையில்லை” என்று சொன்னார். ராணுவமும் ஊருக்கு  வரலை  , அப்படியே  போட்டான் .

இப்பிடி நிறைய இருக்குது.

அந்த காலத்தில எங்களுக்கு பொருளாதார தடை, சாப்பாட்டு பிரச்சனை, மண்ணெண்ணெய் பிரச்சனை, அரிசி பிரச்சனை அப்பிடியான நேரங்களில எல்லாம் அவர் வந்து என்னென்ன சாமான்  வேணுமோ அவ்வளவும் வாங்கி தந்திருக்கிறார்.

இந்த கிராமத்திலே உண்மையில முதல் முப்பது   குடும்பங்கள் தான் இருந்தது பிறகு போரினால பாதிக்கப்பட்ட விதவைக் குடும்பங்களுக்கு அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள்.

இப்போது இந்த  கிராமத்தில்  அறுபத்தொரு குடும்பங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது பெரிய பொக்கனை என்று சொல்வது, தமிழீழ விடுதலைப்புலிகள்   வைத்த பெயர் அக்காச்சி  எழுச்சி குடியிருப்பு.

அவர்களின் நிர்வாகத்திலே ஒரு சனசமூக நிலையம், ஒரு கிராம அபிவிருத்தி  சங்கம் அப்பிடியாக எல்லாம் பெரிய பெரிய திட்டங்களை எல்லாம்  போட்டிருந்தார்கள். அவர்கள் தந்த வீட்டு திட்டத்திலே இருபத்தி எட்டு வீடுகள் வழங்கப்பட்டன. அதிலே ஒன்று ஊரக பணிமனை என்றும், மற்றையது மக்கள்கடை/ உதவும் கரங்கள் என்றும்  நிறுவியிருந்தார்கள்.

அக்காச்சி என்ற  இந்த  கிராமத்தில் ஒரு பாய்த்தொழிற்சாலை ஒன்றையும், கப்டன் ரங்கன் நினைவாக ரங்கன் முன்பள்ளி என்று ஒன்றும் நிறுவப்பட்ட்டிருந்தது.

தற்போது அந்த பாய்த்தொழிற்சாலை ஸ்ரீலங்கா ரானுவத்தால இடிக்கப்பட்டு, ஒரு பாவனைக்கும் உதவாத நிலையில் மீண்டும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த  பாய்த்தொழிற்சாலைக்கான கட்டடம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

கப்டன் அக்காச்சி அவர்கள் சுடபட்டு நீர்வேலி பகுதியில் இறந்தார், அவரின் வித்துடலும் எங்கட  இந்த  ஊருக்கு தான் எடுத்து வந்து   மக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்தார்கள், இங்கே தான் அடக்கமும் செய்திருந்தார்கள்.

இயக்க காலங்களில அக்காச்சி எழுச்சிகுடியிருப்பு  என்று  நெஞ்சை நிமிர்த்தி   நாங்கள் சொல்லக்கூடிய சூழல்  இருந்தது, இப்ப பெரிய பொக்கனை என்று தான் சொல்கிறானாங்கள்.

தொன்னூற்றி ஒராமாண்டு இந்த கிராமத்தை திலீபன் அண்ணாவின் நினைவுதினத்தில் வெகு விமரிசையாக திறந்து கொண்டாடினார்கள்.

தொழிற்சாலை வந்து இந்த மக்கள் கஷ்டப்பட்டவர்கள், வெளியிடங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள் என்ற நோக்கோடும் இங்கேயே அவர்கள் வேலைகளை செய்யக்கூடியவாறு அதனை அமைத்து தந்திருந்தார்கள்.

ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை என்று அதனை பெயர் வைத்து இயக்கி வந்திருந்தோம். ஏழு தறிகள், முப்பது  ஊழியர்கள் வேலை செய்யக்கூடியவாறு அமைத்திருந்தார்கள்.

பாய் தைக்கிற இரண்டு பேர், முகாமையாளர் ஒருவர், அதுக்கு உதவியாளர் ஒருவர் இப்படி முப்பது பேர் வேலை செய்தனர் பாய் அடிச்சு  வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மற்றது  உதவும்கரங்கள், கஷ்டப்பட்ட ஆட்களுக்கேன்று ரேசன் காட் முறையில் மலிவான விலையில் பொருட்கள் வாங்க கூடியவாறு அது அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.

இப்போது நாங்க இங்கே  ஒரு சரியான ஒரு   கடை இல்லாம அவஸ்தை படுகிறோம், உண்மையில் தமிழீழ  விடுதலை புலிகள் இருந்திருப்பார்களேயானால் இந்த கிராமம் வேறுவிதமாக வந்திருக்கும்.

(சொல்லும் போதே அவரின் கண்கள்  குளமாகி கண்ணின் நீர் துளிகள்  விழுகின்றன)

சுவடியாக்கம்-ஜெ.டிஷாந்த்

வாதரவத்தை

வாதரவத்தை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதரவத்தை&oldid=2982133" இருந்து மீள்விக்கப்பட்டது