வானலை அடையாளம்
ஒரு பொருளை தனித்துவமாக வானலையூடாக கண்டு அடையாளப்படுத்தும் தொழில்நுட்பமே வானலை அடையாளம் (Radio Frequency IDentification - RFID) எனப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை வானொலி அலைவரிசை இனம்காட்டி, ஒளியலை அடையாளம், வானலை அடையாள குறி என்றும் தமிழில் குறிப்பர்.
வானலை அடையாள நுட்பமைப்பு மூன்று முக்கிய பின்வரும் கூறுகளால் ஆனது.
- தகடு, சில்லு (Tag)
- படிப்பான், உணரி, செலுத்தி வாங்கி - (Reader, Transceiver)
- தரவு செயலகம் (Data Processing Unit)
தனக்கு கொடுக்கப்பட்டுள்ள நிரலிற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும். உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.
இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.
RFID எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது. இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது அனைத்துவகையான Tagகளிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
தொகு- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள்?
- கண்காணிப்பு சமுதாயம் - 1
- சாவி...யாருக்கு வேண்டும் சாவி[தொடர்பிழந்த இணைப்பு]
- Academic Papers on RFID & inventory problems பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம்
- rfid பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம்
- RFID தகவல் தொடர்பாடல்