வானியல் நாள்

வானியல் நாள் (Astronomical day) என்பது வழக்கமாக நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடிகின்ற நாளுக்குப் பதிலாக நண்பகலில் தொடங்கி சரியாக அல்லது கிட்டத்தட்ட 24 மணி நேரம் கொண்ட நீளத்தைக் கொண்ட நேரப்பகுதியைக் குறிக்கிறது. ஒரு நாளின் மிகச்சரியான நீளம் சூரிய நாள் அல்லது விண்மீன்வழி சூரியநாளின் அடிப்படையில் பலவாறு வரையறுக்கப்படுகிறது.[1][2][3]

வரலாற்றில் வானியல் அறிஞர்களால் வானியல் நாள் (பொதுவாக சூரிய நாளுக்கு மாற்றாக) பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாகவும், வழக்கமான காலங்காட்டும் மரபார்ந்த முறையில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாகவும் இப்பயன்பாடு படிப்படியாகச் செல்வாக்கை இழந்தது.[4][2][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Astronomical day". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013.
  2. 2.0 2.1 Campbell, W.W. "The Beginning of the Astronomical Day". Publications of the Astronomical Society of the Pacific, Vol. 30, No. 178, p.358. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013.
  3. Finkleman, David. "The Future of Time: UTC and the Leap Second" (PDF). American Scientist. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013.
  4. "Logbooks of the Bologna astronomical Observatory for the year 1761". Transits of Venus. University of Oxford. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Transit of Venus Bibliography". Institute for History and Foundations of Mathematics and the Natural Sciences. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்_நாள்&oldid=4052746" இலிருந்து மீள்விக்கப்பட்டது