வானொலி அலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நமக்கு கிடைக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த வானொலி அலைகள் தான் தாங்கி வருகின்றன. இவை மின்காந்த அலைகள் ஆகும். அதாவது இந்த மின்காந்த அலை என்பது ஒரு தளத்தில் மின்புல வேறுபாடுகளும் அதற்குச் செங்குத்தான தளத்தில் காந்தப்புலத்தின் வேறுபாடுகளும் அமைந்து இவ்விரு தளங்களும் விரியும் திசைகளுக்குச் செங்குத்தான திசையில் பரவும் அலை ஆகும். இம்மின்காந்த அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்ட்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. மிக நெடுந்தொலைவு செல்லக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், அண்டங்கள் சிலவும் இவ்வகை அலைகளை வெளிவிடுகின்றன. அவைப பற்றி வானொலி தொலைக்கருவி் மூலமாகவே அறிகிறோம்.
அலை வீச்சில் ஒலியலைகளுக்கு ஏற்றார்போல மாற்றம் ஏற்படுத்தி அலைபரப்பப் படும் AM வானொலி நிலையத்தின் அலைவரிசை 750 Mega Hertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இங்கு அலைவரிசை என்பது அதிர்வெண் ஆகும். ஒரு எளிய சமன்பாடு இந்த அலைநீளத்திற்கும், அதிர்வெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும். அதாவது, அதிர்வெண் x அலைநீளம் = மின்காந்த அலை பரவும் விரைவு ஆகும். மின்காந்த அலைகள் ஒளியின் விரைவில் நகரும். ஒளியின் வேகம் சுமார் 3×108 மீட்டர். இதே போல 100 Mega Hertz அலைவரிசை FM நிலையமானால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM நிலையங்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM நிலையங்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை. FM என்பது ஒலியலைகளுக்கு ஏற்றார்போல அதிர்வெண் மாறும் அலைகளாகும்.