வான் தானுந்து
வான் தானுந்து என்பது அன்றாட போக்குவரத்துக்கு பயன்படத்தக்க வண்ணம் இலகுவாக வானில் உயர்து பயணிக்க வல்ல தானுந்து ஆகும். இப்படிப்பட்ட வாகனம் பல காலமாக எதிர்வுகூறப்பட்ட போதிலும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது சில வான் தானுந்துகள் முன்வடிவ நிலையில் உள்ளன. எடுத்துக்காட்டாக Moller Skycar M400.
தடைகள்
தொகு- வான் தானுந்துகளை வடிவமைப்பு தயாரிப்பபு நுட்ட விடயங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. இலகுவாக மேலெழுந்து செல்லதல், தரையிலும் செல்லுதல், போதிய பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை இன்னும் முழுமை பெறவில்லை.
- இன்னுமொரு பெரும் தடை விலை. தற்போது வடிவமைப்பில் இருக்கும் வான் காரின் விலை 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது பெருமளவு தயாரிக்கப்படும் பொழுது, விலை குறையலாம். ஆனால் அது தரை தானுந்துவின் விலையோடு எந்தளவுக்கு போட்டு போடும் என்பது கேள்விக்குரியதே.
- இன்னுமொரு பெரும் தடை ஏற்கனவே தானுந்துப் போக்குவரதுக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். எல்லா நாடுகளும் பல கோடிகள் செலவில் சாலைப் போக்குவர ஏற்பாடுகளை செய்துள்ளன. இதே போன்று வான் போக்குவரத்தை ஏதுவாக்குவதென்றால், அது ஒரு பெரும் செலவு ஆகும்.