வாரங்கல் அருங்காட்சியகம்

வாரங்கல் தொல்லியல் அருங்காட்சியகம் (Warangal ASI Museum) இந்தியாவின் தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள இசை தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1] இதை இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.

வாரங்கல் அருங்காட்சியகம், Warangal Museum
Map
அமைவிடம்வாரங்கல், தெலுங்கானா, இந்தியா

தொகுப்பு

தொகு

ஒற்றை மாடிக் கட்டடம் ஒன்றில் இந்து, பெளத்த, சமண சமயச் சிற்பங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள தோட்டத்தில் பெரிய அளவிலான நந்தி, சைவ சிற்பங்களுடன், பளிங்கினால் ஆன புத்தர் மற்றும் சாமுண்டா சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு 11 ஆம் நூற்றாண்டின் பார்சுவநாதர் சிலை, சண்முகர் அல்லது கந்தனின் உருவமும், 12ஆம் நூற்றாண்டின் வீரபத்திரர் சிற்பத்தையும் கொண்டுள்ளது. இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பண்டைய நாணயங்கள் மற்றும் மட்பாண்டத் துண்டுகளும் இங்குள்ளது. இங்கு இப்பகுதியில் உள்ள ககாதியா கோயிலும் நல்கொண்டா மாவட்டத்தில் பிள்ளலமாரியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டின் கோயில் தலங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "ASI Museum Warangal". Archived from the original on 2014-12-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.