வாரீர் படைத்திடும் தூய ஆவி

வாரீர் படைத்திடும் தூய ஆவி (இலத்தீன்: Veni Creator Spiritus; ஆங்கில மொழி: Come Creator Spirit) என்னும் பாடல் 9ம் நூற்றாண்டில் இரானானுஸ் மௌருஸ் என்பவரால் இலத்தீனில் இயற்றப்பட்டது ஆகும். இது கிரெகோரியன் பாடல் முறையில் பாடப்படுவது வழக்கம். இது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவி பெருவிழாவன்று திருப்புகழ்மாலையில் பாடப்படுகின்றது. மேலும் இது திருப்பீடத் தேர்தலின் போது கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்துள் நுழையும் போதும், ஆயர் அருட்பொழிவுவின் போதோ, குருத்துவ திருநிலைப்பாட்டின் போதோ, உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தின் போதோ, ஆலய அபிஷேகத்தின் போதோ, மன்றங்களோ ஆள்ளது சங்கங்களோ கூடும் போதோ, அரச முடிசூட்டு விழாவிலும், துறவற வார்த்தைப்பாட்டின் போதும் பாடப்படுவது வழக்கம்.

குஸ்தாவ் மாலர்[1], ஹெக்டர் பேர்லியோஸ்.முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

கிரெகோரியன் பாடல் முறையில் இப்பாடலின் முதல் வரி

பாடல்

தொகு
இலத்தீன்
தமிழ்
Veni, creator Spiritus
mentes tuorum visita,
imple superna gratia,
quae tu creasti pectora.
வாரீர்! படைத்திடும் தூய ஆவி
மக்கள் தம் இதயங்களில் சேரீர்!
நிரப்பும் அருட்கொடை வரங்களினால்
நீவீர் வழங்கின இதயங்களில்!
Qui diceris Paraclitus,
altissimi donum Dei,
fons vivus, ignis, caritas
et spiritalis unctio.
தேற்றரவாளர் என்பவரே!
சீரிய இறைவனின் திருக் கொடையே!
வற்றா ஊற்றே! அக்கினியே!
வளரன்பே ஞானப் பூசுதலே!
Tu septiformis munere,
digitus paternae dexterae
tu rite promissum Patris
sermone ditans guttura.
அருங் கொடை ஏழுக்குரியவரே!
தந்தை வலக்கரத் திருவிரலே!
தந்தையின் வாக்கினைக் காத்தவரே!
சிந்தனைசொல் வரம் நிறைப்பவரே!
Accende lumen sensibus,
infunde amorem cordibus,
infirma nostri corporis,
virtute firmans perpeti.
ஐம்புலன் களுக்கொளி மூட்டிடுவீர்!
அன்பினை இதயத்தில் பாய்ச்சிடுவீர்
தெம்பில்லா உடற்கழி வில்லாத
சீர்மிகு வலிமையை ஏற்றிடுவீர்!
Hostem repellas longius
pacemque dones protinus;
ductore sic te praevio
vitemus omne noxium.
விரைவாக எம்பகைவரை விரட்டி
துரிதமாய் அமைதியை அளித்திடுவீர்!
வரும் வினை களிலிருந் தகன்றிடவே
வழிநடத்தும் தலைமை வகித்தே.
Per te sciamus da Patrem
noscamus atque Filium,
te utriusque Spiritum
credamus omni tempore.
உம் வழியாகத் தந்தையையும்
திருமகன் அவரையும் அறிந்திடவே
இருவரின் ஆவி நீர்தாமென
எளியோர் விசுவசித்திட உதவும்.
Deo Patri sit gloria,
et Filio qui a mortuis
Surrexit, ac Paraclito,
in saeculorum saecula.
Amen.
தந்தை இறைவனுக்கும் மகிமை!
இறந்தும் உயிர்த்த மைந்தனுக்கும்
இந்தத் தேற்றர வாளருக்கும்
என்றென்றும் மகிமை பெருகிடுக!
V. Emitte Spiritum tuum, et creabuntur:
R. Et renovabis faciem terrae.
மு. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
து. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

Oremus: Deus qui corda fidelium Sancti Spiritus illustratione docuisti: da nobis in eodem Spiritu recta sapere, et de eius semper consolatione gaudere. Per Dominum nostrum Jesum Christum, Filium tuum, qui tecum vivit et regnat in unitate eiusdem Spiritus Sancti Deus. Per omnia saecula saeculorum. Amen.

மன்றாடுவோமாக: எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமாகிய இறைவா, உம்முடைய ஆவியால் எங்களை வழிநடத்துகின்றீர். உமது அருட்காவலில் நாங்கள் உயிர்வாழச் செய்கின்றீர்; எம் மீது இரங்கி, எங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தருளும். உம்மையே நம்பியிருக்கும் எங்கள் விசுவாசம் மேன்மேலும் உறுதி பெறுமாறு, உம்முடைய ஆவியின் கொடைகளை எங்களுக்கு நிறைவாய்த்தந்து உதவியருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்

மேற்கோள்கள்

தொகு
  1. Symphony No. 8 (Mahler)|Symphony No. 8 in E-flat major