தூய ஆவியே, எழுந்தருள்வீர்

தூய ஆவியே, எழுந்தருள்வீர் என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவி பெருவிழாவின் போது திருப்பலியில் தூய ஆவியாரை நோக்கிப் பாடப்படும் தொடர் பாடல் ஆகும்.[1] இதனை 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டோ அல்லது கேட்டன்பரி ஆயராக இருந்த ஸ்டீபன் இலாங்டனோ இயற்றியிருக்கலாம்.

மத்திய காலத்தில் இயற்றப்பட்ட ஐந்து தொடர் பாடல்களில் இதுவும் ஒன்று. இது திரெந்து சங்கத்தில் 1570ஆம் ஆண்டு திருவழிபாட்டில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.[2]

பாடல்

தொகு
இலத்தீன் வடிவம் தமிழ் வடிவம்
Veni, Sancte Spiritus,
et emitte caelitus
lucis tuae radium.
Veni, pater pauperum,
veni, dator munerum
veni, lumen cordium.
Consolator optime,
dulcis hospes animae,
dulce refrigerium.
In labore requies,
in aestu temperies
in fletu solatium.
O lux beatissima,
reple cordis intima
tuorum fidelium.
Sine tuo numine,
nihil est in homine,
nihil est innoxium.
Lava quod est sordidum,
riga quod est aridum,
sana quod est saucium.
Flecte quod est rigidum,
fove quod est frigidum,
rege quod est devium.
Da tuis fidelibus,
in te confidentibus,
sacrum septenarium.
Da virtutis meritum,
da salutis exitum,
da perenne gaudium,
Amen, Alleluia.
தூய ஆவியே, எழுந்தருள்வீர்
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
ஆமென். அல்லேலூயா.

ஆதாரங்கள்

தொகு
  1. Liber Usualis, pp. 880-81. Solesmes 1961.
  2. David Hiley, Western Plainchant : A Handbook (OUP, 1993), II.22, pp.172-195

வெளி இணைப்புகள்

தொகு