வார்த்தை வாசல் (நூல்)
வார்த்தை வாசல் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார்.
நூலாசிரியர் | சுரதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியிடப்பட்ட நாள் | 1984 |
பக்கங்கள் | 80 |
தோற்றமும் தன்மையும்
தொகுபல நூல்களுக்கு சுரதா அவர்கள் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே, இந்நூலாகும். இந்நூலில் உள்ளவை புதுப்பாடல்(புதுக்கவிதை) வடிவிலும், மரபுப்பாடல்(மரபுக்கவிதை) வடிவிலும் உள்ளன.
பொருளடக்கம்
தொகுஇனிக்கும் நினைவுகள்
தொகுபேராசிரியர் எழில் முதல்வன் அவர்கள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
மணிப்புறா
தொகுமார, தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'மணிப்புறா' என்னும் நாவலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
திருமதி சிற்றம்பலம்
தொகுபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய 'திருமதி சிற்றம்பலம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
ரம்போலா கவிதைகள்
தொகுபேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் அவர்கள் எழுதிய 'ரம்போலா கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
தமிழே என் உயிர்
தொகுகவிஞர் மூவேந்தன் அவர்கள் எழுதிய 'தமிழே என் உயிர்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
இருதய வியாதிகளும் சிகிச்சையும்
தொகுடாக்டர் எச்.செல்வராஜ் அவர்கள் எழுதிய 'இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1968இல் வழங்கிய அணிந்துரை.
பாட்டுத் தோட்டம்
தொகுபூவண்ணன் அவர்கள் எழுதிய 'பாட்டுத் தோட்டம்' என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970இல் வழங்கிய அணிந்துரை.
கட்டில் வீணை
தொகுகவிஞர் புதுமைவாணன் அவர்கள் எழுதிய 'கட்டில் வீணை' என்னும் கவிதை நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.
சிரித்து மகிழுங்கள்
தொகுபேராசிரியர் ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய 'சிரித்து மகிழுங்கள்' என்னும் நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.
சந்தனக் கிண்ணம்
தொகுகவிஞர் ஐ.உலகநாதன் அவர்கள் எழுதிய 'சந்தனக் கிண்ணம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
ஒற்றையடிப்பாதை
தொகுபேராசிரியர் ரா.சோதிவாணன் அவர்கள் எழுதிய 'ஒற்றையடிய் பாதை' என்னும் கவிதை நூலுக்கு 1976இல் வழங்கிய அணிந்துரை.
புன்னகை
தொகுகவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய 'புன்னகை' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.
நயனங்கள்
தொகுகவிஞர் சா.ஆ.அன்பானந்தன் அவர்கள் எழுதிய 'நயனங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.
நேயர் விருப்பம்
தொகுகவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 'நேயர் விருப்பம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.
உலகே உனக்காக
தொகுகவிஞர் நரிப்பையூர் கசேந்திரன் அவர்கள் எழுதிய 'உலகே உனக்காக' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.
பொழுது புலர்ந்தது
தொகுகவிஞர் பட்டுக்கோட்டை ராசேந்திரன் அவர்கள் எழுதிய 'பொழுது புலர்ந்தது' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.
மனத்தூறல்
தொகுகவிஞர் ம.ஏ.கணேசன் அவர்கள் எழுதிய 'மனத்தூறல்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.
நிலா முற்றம்
தொகுகவிஞர் வேலூர் ம.நாராயணன் அவர்கள் எழுதிய 'நிலா முற்றம்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.
தமிழ்ப்பாவை
தொகுகவிஞர் உரத்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்பாவை' என்னும் கவிதை நூலுக்கு 1983இல் வழங்கிய அணிந்துரை.
மன்மத ராகங்கள்
தொகுஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய 'மன்மத ராகங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
போர்க்களத்தில் பாரதம்
தொகுகவிஞர் சைதை ஓடையான் அவர்கள் எழுதிய 'போர்க்களத்தில் பாரதம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
பொழுது புலரட்டும்
தொகுகவிஞர் முகில்வாணன் அவர்கள் எழுதிய 'பொழுது புலரட்டும்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
இன்னொரு விடுதலை
தொகுகூ.வ.எழிலரசு அவர்கள் எழுதிய 'இன்னொரு விடுதலை' என்னும் நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
சந்தனக்கதவு
தொகு'சந்தனக் கதவு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1971இல் வழங்கிய அணிந்துரை.
கலாவள்ளி காவியம்
தொகுபினாங்குக் கவிஞர் ஓ.எம்.காதர் சுல்தான் அவர்கள் எழுதிய 'கலாவள்ளி காவியம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.
மேற்கோள்கள்
தொகு- "thamizhagam.net" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- "openreadingroom.com"
வெளியிணைப்புகள்
தொகு"நூலைப்படிக்க" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்