வார்ப்புரு:Portal:Ayyavazhi/Intro
அய்யாவழி (அய்யா+வழி) - தந்தையின் வழி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய தர்மக்கோட்பாட்டு சமயமாகும். இதன் புனித நூல்கள் அகிலத்திரட்டு அம்மானையும் அருள் நூலுமாகும். பிரபஞ்ச உற்பத்திக்கும் மனித உற்பத்திக்கும் பொதுவாக ஒரே சூத்திரத்தை அய்யாவழி கையாளுகிறது. ஒருமைக்கோட்பாட்டு சமயமான அய்யாவழி கலியுகத்தில் வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக காண்கிறது.