வார்ப்புரு பேச்சு:இன்றைய உதவிக்குறிப்பு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
இதைத் தொடர்ந்து இற்றைப்படுத்த முடிவதில்லை. எனவே, {{noofarticles} என்பது போன்றே இன்றைய நாளைக் குறிக்க வார்ப்புரு ஒன்று இருக்குமல்லவா? அந்த வார்ப்புருவை இங்கே இட்டுவிட்டால், இற்றைப்படுத்தாவிடிலும் இன்றைய நாளையே காட்டும். இதன்மூலம் புதுப்பயனர் இற்றைப்படுத்தப் பட்டதைப் பார்ப்பதாகவே உணர்வார்கள். அடிக்கடி இற்றைப்படுத்த முடிந்தாலும், நாள்தோறும் இற்றைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 24 அக்டோபர் 2012 (UTC)
- நாள் தோறும் புதிய உதவிக் குறிப்பை இடுவது இயலாது. தற்போதுள்ளது போல் அன்றைய தேதியைக் காட்டுவது சரி. ஆனால், இதனை புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புருவில் இடுவது எதிர்பார்க்கும் பயனைத் தராது என்று கருதுகிறேன். நான் ஒரு முறை கூட இதனைப் படித்துப் பார்த்தது இல்லை. இதனை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இட்டால் தொடர் பங்களிப்பாளர்களின் கவனத்தைப் பெறலாம். அதற்கு ஏற்றவாறு பங்களிப்பைத் தூண்டும் குறிப்புகளை இட வேண்டும்.--இரவி (பேச்சு) 12:22, 18 பெப்ரவரி 2013 (UTC)
- கடந்த ஐந்து மாதங்களாக வார்ப்புரு இற்றைப்படுத்தப்படவில்லை. ஆர்வமுள்ள பயனர்கள் கவனித்துச் செய்யலாம். இல்லாவிட்டால், புதுப்பயனர் வார்ப்புருவில் இருந்து எடுத்து விடுவது நல்லது.--இரவி (பேச்சு) 18:06, 5 செப்டம்பர் 2013 (UTC)
- தொடர்ந்து பல மாதங்களாக வார்ப்புரு இற்றைப்படுத்தப்படாததால், புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புருக்களில் இருந்து நீக்கியுள்ளேன்.--இரவி (பேச்சு) 07:02, 10 அக்டோபர் 2013 (UTC)