வார்ப்புரு பேச்சு:திருக்குறள்


திருக்குறள் குறித்த மொழிபெயர்ப்புகளுக்கு, இவ்வார்ப்புருவில் ஒரு இடம் இருக்குமாயின், இன்னும் சிறப்பாகும். அதற்காக உழைத்த, அறிஞர்களின் படைப்புகள், உலகில் சிதறிக்கிடக்கின்றன. அத்தகைய ஆவணங்களை நாம் விக்கியாக்கம் செய்ய வேண்டும். இதற்கு உலகெங்கிலும் உள்ள அறிஞர்களுக்கு அழைப்பு விடுதல் எப்படி? நம் தமிழகத்தில் இங்கு பல நூல்கள் பேணப்பட்டு வருகின்றன. அவற்றினை மின்னூலாக்கம் செய்ய, பேராவல் கொண்டுள்ளேன். இதற்காக உதவிடும் எண்ணம் கொண்டவர்கள், இப்பக்கத்தில் தெரிவிக்கவும். நாம் ஒன்று கூடி, திட்டப்பணியொன்று செய்வோம். இதற்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றாலும், நிதி ஒதுக்கீடு தேவையென்பதால், நானும் எனது நண்பரும் இதனைத் தள்ளிப்போட்டு வருகிறோம். --≈ உழவன் ( கூறுக ) 13:55, 3 ஆகத்து 2013 (UTC) ^Reply

  • தகவலுழவன், தங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளேன். இவ்வார்ப்புருவை விக்கிப் பயனர்களுக்கு உதவும் வகையில் மேம்படுத்த வழி கூறுங்கள். மின்னூலாக்கம் பற்றித் தாங்கள் கூறுவது பெரிய திட்டமாகப் படுகிறது. எனினும், முதலில் சிறிய அளவில் ஜி.யு.போப், ராஜாஜி போன்றோர் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தொடங்கி, பின்னர் விரிவாக்கலாம். வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 15:16, 3 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "திருக்குறள்" page.