வார்ப்புரு பேச்சு:Infobox Tamils

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

இந்த தகவல்சட்டத்தில் பெரியாரின் புகைப்படம் இருந்தது. பெரியார் தமிழர் இல்லை. அதனால் ஆங்கில கட்டுரையில் உள்ள புகைப்படங்களை இட்டுள்ளேன். இதில் மாதங்கி அருள்பிரகாசம் குறிப்பிடத்தக்கவரா என்று தெரியவில்லை. நவநீதம் பிள்ளை, சேவியர் தனிநாயகம் இருவரில் யாரையேனும் குறிப்பிடலாமா?

கட்டுரையில் மாற்றத்திற்கு முன்பிருந்த புகைப்பட பட்டியல் கீழே --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:39, 13 நவம்பர் 2013 (UTC)Reply

திருவள்ளுவர் • இராஜராஜ சோழன் • ஔவையார் • ஈ. வெ. இராமசாமி • அம்பிகா சீனிவாசன் • சுப்பிரமணிய பாரதி • ச. வெ. இராமன் • இராமானுசன் • விசுவநாதன் ஆனந்த் • ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் • ஏ. ஆர். ரகுமான் • ம. ச. சுப்புலட்சுமி • நவநீதம் பிள்ளை • சேவியர் தனிநாயகம் • குட்டி ரேவதி

Top 15 தமிழர்கள் என்று ஏதாவது முறை இருந்தால் நல்லது. :) --Anton·٠•●♥Talk♥●•٠· 11:44, 13 நவம்பர் 2013 (UTC)Reply


போதி தர்மன் தமிழ் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் தமிழ் புலத்தில் பிறந்த, தமிழில் எழுதிய, பேசிய, தமிழர்களுக்காக உழைத்த, தன்னைத் தமிழராகக் கருதிய பெரியார் தமிழர் இல்லையா?
இந்தப் படச் சேர்ப்பில், பன்னாட்டுத் தமிழர்களும், பெண்களும், பல் துறையினரும் இடம் பெற வேண்டும். இல்லாவிடின் எவரின் படமும் தேவை இல்லை. --Natkeeran (பேச்சு) 05:09, 24 நவம்பர் 2013 (UTC)Reply
தமிழர் என்பதன் அளவுகோளாக எதை விக்கிப்பீடியா கருதுகின்றது என்று தெரியவில்லை. ஆனால் தன்னை தமிழராக பெரியார் கருதினாலும் கருதாவிட்டாலும், மாற்றுமொழியை தாய்மொழியாக கொண்டவர்களை தமிழர் என்பதை ஏற்க இயலாது. தமிழுக்காக உழைத்தவர்கள் எல்லோரும் தமிழர் என்று விக்கிப்பீடியா முடிவு செய்யும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போது தமிழ் நாட்டிற்கு அதிகம் இடம்பெரும் அனைத்து பீகாரிகள் வரை அனைவரும் தமிழராக கருதப்பட வேண்டிய அபாயம் நிகழும். \\இல்லாவிடின் எவரின் படமும் தேவை இல்லை. \\ இப்படியொரு நிலை வரவேண்டாம். தற்போதுள்ள படங்களே தொடரட்டும். நான் செய்ய மாற்றங்களுக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:12, 24 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Infobox_Tamils&oldid=2193312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Infobox Tamils" page.