வாலாங்குளம்
வாலாங்குளம் தமிழகத்தின் கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது உக்கடத்தில் இருந்து ராமநாதபுரம் பகுதி வரை பரந்துள்ளது. இதன் நீராதாரம் நொய்யல் ஆறு ஆகும். ஏறக்குறைய 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவை பாலக்காடு இருப்புப்பாதை இக்குளத்தின் ஊடாகச் செல்கிறது. இதன் ஒரு புறம் பாலக்காடு புறவழிச்சாலையும் மறுபுறம் திருச்சி சாலையும் செல்கின்றன.
ஆகாயத்தாமரைகள் நிறைந்திருக்கும் இக்குளத்தில் கொக்குகள், நாமக்கோழிகள் போன்றவற்றைப் பார்க்க முடியும்.