வாலிகொண்டா போர்

வாலிகொண்டா போர் (Battle of Valikondah) என்பது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்பிய பிரெஞ்சு இராணுவத்திற்கும், ஆங்கிலேய இராணுவத்திற்கும் இடையே 1751 ஆம் ஆண்டு நடைபெற்ற போரைக் குறிக்கிறது.[1]

இரஞ்சன்குடிக்கோட்டை

வரலாறு

தொகு

1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் (முகம்மது அலியின் உதவியுடன்), பிரெஞ்சுப் படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) தமிழ்நாட்டில், தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இரஞ்சன்குடிகோட்டை முன் இப்போர் இடம்பெற்றது. இக்கோட்டையின் அருகில் உள்ள வாலிகொண்டா என்ற ஊரின் பெயரில் இப்போர் அழைக்கப்பட்டாலும், இரஞ்சன்குடிக்கோட்டையிலேயே போர் இடம்பெற்றது. ஆரம்பத்தில் பிரெஞ்சுப் படையினர் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதிப் போரில் பிரித்தானியப் படையினர் உள்ளூர் முசுலிம்களின் உதவியுடன் வென்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிகொண்டா_போர்&oldid=3244628" இலிருந்து மீள்விக்கப்பட்டது