வால்டர் எலியட் (இயற்கையியலர்)
சர் வால்டர் எலியட், (Walter Elliot, 16 சனவரி 1803 - 1 மார்ச் 1887) என்பவர் இந்தியாவில் பணிபுரிந்த ஒரு ஸ்காட்டிஷ் அரசு ஊழியர். இவர் ஒரு கீழ்த்திசை மொழிப்புலமையாளர், மொழியியலாளர், இயற்கை ஆர்வலர், இனவியலாளர் ஆவார். இவர் முதன்மையாக மதராஸ் இராஜதானியியல் பணியாற்றினார். எடின்பரோவில் பிறந்த இவர், ஹெயில்பரியில் உள்ள கிழக்கிந்தியக் கல்லூரியில் பயின்றார், 1820 இல் மதராசில் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தவர், 1860 வரை பணியாற்றினார். மதராஸ் மாகாண ஆளுநருக்கான அவையில் 1821 முதல் 1860 வரை உறுப்பினராக இருந்தார்.
இவர் சார்லஸ் டார்வினுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரின் ஆய்வுகளுக்காக, இந்தியாவின் பல்வேறு பறவைகளின் தோலை அவருக்கு அனுப்பி உதவியுள்ளார். தாமஸ் ஜெர்டானுடன் இணைந்து, ‘Madras Journal of Literature and Science' இதழில் தென்னிந்தியாவின் பாலூட்டிகளை வகைப்படுத்தி எழுதினார். மூங்கில் அணத்தான் உயிரினத்தின் அறிவியல் பெயரின் பிற்பாதி, இவரது நினைவாக அனதனா எலியோட்டி (Anathana elliotti) என்று வைக்கப்பட்டுள்ளது.[1]