வால்டர் ஹன்ட்

வால்டர் ஹன்ட் (Walter Hunt:1796–1859) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்த ஓர் இயந்திரப் பழுதுபார்ப்பவராவார். இவர் ஏராளமான பொருள்களைக் கண்டறிந்துள்ளார். பூட்டுத் தையல் இயந்திரம் (1833), ஊக்கு (1849)[1] , தொடர்ச்சியாகச் சுடும் வின்செஸ்டர் துப்பாக்கி, சனல் ஸ்பின்னர், கத்தியைக் கூராக்கும் கருவி, மகிழுந்தில் ஒலியெழுப்பும் மணி, கடின நிலக்கரியை எரிக்கும் அடுப்பு, செயற்கைக்கல், தெருக்கூட்டும் இயந்திரம், மூன்று சக்கர மிதிவண்டி, மற்ரும் பணிக்கலப்பை ஆகியன இவர்தம் புகழ்பெற்ற கண்பிடிப்புகளாகும்.[2] வால்ட்டர் ஹன்ட் இப்பொருள்களைக் கண்டுபிடித்தபோது இதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. இவரின் கண்டுபிடிப்புகள் யாவும் இன்று பரவலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள பொருள்களாகும். இவர் கண்டறிந்த ஊக்கியை (safety pin) சிறிய பொருள்தானே என நினைத்து அதன் காப்புரிமையை டபிள்யூ ஆர் கிரேஸ் என்ற (WR GRACE) நிறுவனத்தில், ஒருவருக்குச் செலுத்த வேண்டிய 15 டாலருக்காக ($ 15 ) சிறிய தொக்கையான 400 ($400)அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்தார்.[3]

Walter Hunt
Walter Hunt
பிறப்பு(1796-07-29)29 சூலை 1796
இறப்பு8 சூன் 1859(1859-06-08) (அகவை 62)
தேசியம்அமெரிக்க ஐக்கிய நாடு
பணிinventor
அறியப்படுவதுfountain pen
sewing machine
safety pin
flax
streetcar bell
hard-coal-burning stove
street sweeping machinery,
velocipede
ice plough

இவர் கண்டுபிடித்த தையல் இயந்திரம் அமெரிக்காவில் ஆடைவடிவமைப்பில் ஈடுபட்ட பெண்களுக்கு வேலையின்மையை ஏற்படுத்தும் என அஞ்சினார். எனவே அதற்கான காப்புரிமையைக் கோரவில்லை. ஆனால் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றபோது 1854 ஆம் ஆண்டில் காப்புரிமைக்கான நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தோல்வியில் முடிந்தது. ஏனெனில் வால்டர் கண்டறிந்த தையல் இயந்திரத்தில் பல பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்தன.[4] அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை வழக்குரைஞராகப் பணியாற்றிய சார்லஸ் கிராப்டன் பேஜ் என்பவரின் உதவியால் இவருடைய பல கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையைப் பெற்றார். இவர் இறந்தபின் இவருடைய உடல் நியூ யார்க், புரூக்ளின் நகரிலுள்ள கிரீன் வுட் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பபட்டது.

இவருடைய கண்டுபிடிப்புகளின் படங்கள் சில.

குறிப்புகள் தொகு

  1. "Safety Pin patent - US Patent and Trademark Office". 9 April 2002. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
  2. Marshall Cavendish, Marshall Cavendish Corporation, Inventors and inventions. New York : 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7761-7, p. 845 ff. p. 845.
  3. Discoveries
  4. O'Dwyer, Davin (29 April 2011). "Inspiring innovators: Walter Hunt". Irish Times (Ireland) இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130127005849/http://www.irishtimes.com/newspaper/innovation/2011/0429/1224295375203.html. பார்த்த நாள்: 28 October 2011. 

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டர்_ஹன்ட்&oldid=3791744" இலிருந்து மீள்விக்கப்பட்டது