வால்டிரவுட் செய்ட்டர்
வால்டிரவுட் செய்ட்டர் (Waltraut Seitter) (ஜனவரி 13, 1930 – நவம்பர் 15, 2007) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார்.[1]
வால்டிரவுட் செய்ட்டர் Waltraut Seitter | |
---|---|
பிறப்பு | வால்டிரவுட் கரோலா செய்ட்டர் 13 சனவரி 1930 சுவிக்காவு, செருமனி |
இறப்பு | 15 நவம்பர் 2007 சால்கென்மெக்ரென், செருமனி |
தேசியம் | செருமன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுமித்து கல்லூரி |
பணி | வானியல் வல்லுநர் |
வாழ்க்கைத் துணை | இல்மர் டுயர்பெக்கு |
வால்டிரவுட் கரோலா செய்ட்டர் 1930 இல் சிவிக்கவுவில் பிறந்தார்.[2] அங்கு இவரது தந்தையார் ஆர்ச்சு தானூர்திக் குழுமத்தில் பொறியாளராகப் பணி செய்துவந்தார். இவர் கொலோன் பள்ளியில் சேர்ந்து 1949 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். இதற்கிடையில் இவர் குறுந்தொடர்வண்டி சீட்டு திரட்டுநராகவும் அகதிகள் உதவியாளராகவும் பெண் வரைவாளராகவும் பணி செய்துள்ளார். பின்னர், இயற்பியல், கணிதவியல், வேதியியல், வானியல் கற்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் மசாசூசட், நார்த்தாம்ப்டனில் உள்ள சுமித் கல்லூரியில் புல்பிரைட் திட்டக் கல்விநல்கையுடன் தன் படிப்பைத் தொடர்ந்தார். இவர் 1955 இல் தன் முதுகலைப் பட்டத்தை இயற்பியலில் பெற்றார். பிறகு வானியல் பயிற்றுநராக வேலை செய்தார். இவர் 1958 முதல் 1962 வரை பான் பல்கலைக்கழகத்தின் ஓகர் இலிசுட்டு வான்காணகத்தில் பணியாற்றித் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் பான் பல்கலைக்கழகத்தில் உதவியாளராகவும் நோக்கீட்டாளராகவும் கூடுதல் ஆர்வப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் 1967 இல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் அமெரிக்க வானியல் கழக விருந்து தகைமைப் பேராசிரியராக இருந்தார். பின்னர், 1973 இல் இருந்து சுமித் கல்லூரியின் எல்சா ஆப்பிள்டன் ஏவன் வானியல் கட்டிலில் பேராசிரியரானார். இவர் 1975 இல் செருமனி, மூயென்சுட்டர் பல்கலைக்கழகத்தின் வானியல் கட்டிலில் அமர்த்தப்பட்டார். செருமனி வானியல் கட்டிலில் அமர்ந்த முதல் பெண்மணி இவரே ஆவார். இவர் வானியல் நிறுவன இயக்குநராகி 1995 இல் ஓய்வு பெறும் வரை இருந்துள்ளார்.[1][3][4]
பானில் இருந்தபோது, இவர் விண்மீகளின் புள்ளியியலிலும் அவற்றின் கதிர்நிரல்சார் வகைப்பாட்டியலிலும் ஆய்வு செய்து, இருதொகுதிகளாக பான் கதிர்நிரல் அட்டவணையைத் தொகுத்தார். மூயென்சுட்டரில் இருந்தபோது இவர் பொறுப்பான இளம் ஆய்வாளர் குழுவைப் பயன்படுத்தி மூயென்சுட்டர் செம்பெயர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இத்திட்டம் பிரித்தானியச் சுகிமிடு தொலைநோக்கி பொருள்வில்லைப் படிகத் தட்டுகளைப் பயன்படுத்தி மூயென்சுட்டர் செவ்வானளக்கையை மேற்கொள்ளும் ஒரு முறையாகும். இந்த செவ்வானளக்கைத் திட்டம் தெற்கு வான் அரைக்கோள பால்வெளிகளை அட்டவணைப்படுத்தியது. இந்தத் திட்டத் தரவுகளில் இருந்து அண்டவியல் மாறிலியின் செயல்பாடு குறித்த தகவல்கள் கிடைக்கலாயின. இம்மாறிலியின் நிலவுகை பின்னர் மேற்கொண்ட மீவிண்மீன் வெடிப்புத் தேட்டங்களில் இருந்து நிறுவப்பட்டது.
இவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை விண்மீன் வெடிப்பு பற்றியும் அவ்வெடிப்பு உமிழ்ந்த விண்மீன்கள் பற்றிய ஆய்வில் செலவு செய்தார்.
வானியலில் மகளிர், சிறையில் அறிவியல் (சுமித் கல்லூரி), கெப்ளரின் காலமும் களமும் (மூயென்சுட்டர் 1980) ஆகிய பொருட்காட்சிகளை நடத்தினார். இவர் பல பன்னாட்டு வானியல் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.
இவர் 1975 இல் தன்னுடன் பணிபுரிந்த வானியலளராகிய இல்மார் தியூயர்பெக்கை மணந்தார்.
சிறுகோள் 4893 செய்ட்டர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[3][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Köpfe". www.uni-muenster.de. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
- ↑ Biographie, Deutsche. "Seitter, Waltraut Carola - Deutsche Biographie". www.deutsche-biographie.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
- ↑ 3.0 3.1 Schmadel, Lutz D., ed. (2007), "(4893) Seitter", Dictionary of Minor Planet Names (in ஆங்கிலம்), Berlin, Heidelberg: Springer, p. 422, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-29925-7_4785, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7
- ↑ "Scientist Sees Education as Best Weapon Against Light Pollution". International Dark-Sky Association (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
- ↑ Guide, Universe (2019). "4893 Seitter Asteroid Facts". Universe Guide (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.