வாழ்வாங்கி

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
(வாள்வாங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாழ்வாங்கி (வாள்வாங்கி என்றும் அழைக்கப்படுகிறது) (valvanki ) என்ற ஊர் தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் செட்டிக்குறிச்சிக்கு உட்கடை கிராமமாக அமைந்துள்ளது. இந்த ஊர் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை '45 பி' இல் அருப்புக்கோட்டை பந்தல்குடிக்கு இடையில் அருப்புக்கோட்டைக்குத் தெற்கில் 8 ஆவது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

தோற்றம்

தொகு

இவ்வூர் இராமநாதபுரம் சேதுபதி சமத்தானத்தின் கீழ் கட்டுப்பட்ட ஊர் ஆகும். பிள்ளைமுத்து என்ற சமத்தான பணியாளரால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூர் உருவாக்கப்பட்டது. எனவே தொடக்கத்தில் பிள்ளைமுத்துபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வாள்வாங்கி என்று அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம்

தொகு

இவ்வூருக்குத் தாய்ப்பகுதியான செட்டிக்குறிச்சியும் அருகாமை கிராமங்களும் கம்பளத்து நாயக்க மரபு நிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்தது. அங்கு இடிந்த நிலையில் உள்ள அரண்மனை எச்சங்கள் உள்ளன.னைக்குலத்தின் இளைய நிலக்கிழார் சாரங்குராசன் மீது காம இச்சை கொண்ட தன் சித்தியின் சதியால் தன் தந்தையாலே கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வாள் இறையாற்ற்ல் மறைக்கப்பட்டதாக இப்பகுதியினர் நம்புகின்றனர். அவர் கொல்லப்பட்ட இடம் வாள்வாங்கியின் காட்டுப் பகுதியாகும். எனவே இவ்வூர் வாள்வாங்கி என்று பெயர் பெற்றதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இங்கு சராசரியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவித்திருவிழா நடைபெறுகிறது. இப்புரவி மீது எந்தவிதமான இறைச்சின்னங்கள் வைக்கப்படுவது இல்லை. வெள்ளை வேட்டிகள் மட்டுமே குதிரையின் முதுகின் மீது குறுக்கே இடப்படுகின்றன. இக்குதிரை அரண்மனையில் இருந்து சாரங்குராசன் கொலை செய்யப்பட்ட இடம் வரை செல்கின்றது.

மக்கள்தொகை

தொகு

இவ்வூர் மக்கள்தொகை 1610 பேர் ஆவர். இவரில் ஆண்கள் 670 பேர்,பெண்கள் 720 பேர், குழந்தைகள் 260 பேராக அமைகின்றனர்.

பள்ளிகள்

தொகு

இப்பகுதியில் கீழ்வரும் பள்ளிகள் உள்ளன.

  • இரெங்கநாதா தொடக்கப்பள்ளி
  • அருகாமை மேல்நிலைப்பள்ளி
  • அரசு மேல்நிலைப்பள்ளி
  • செட்டிக்குறிச்சி பள்ளி
  • அரசு கலை அறிவியல் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்வாங்கி&oldid=4074565" இலிருந்து மீள்விக்கப்பட்டது