வாழை முலாம்பழம்

வாழை முலாம்பழம் (Banana melon) என்பது முலாம்பழ வழித்தோன்றலாகும். இது இன்னீரம் (முலாம்பழம்) வகையில் குகுமிசு பேரினத்திலிருந்து 1880ஆம் ஆண்டு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

வாழை முலாம்பழம்
Banana melon
பேரினம்குகுமிசு
இனம்குகுமிசு மெலோ
பயிரிடும்வகை'வாழை'
தோற்றம்ஐக்கிய நாடுகள்

விளக்கம்

தொகு

இதன் எடை 5 முதல் 10 பவுண்டுகள் வரையும் (2.2 முதல் 3.6 கிலோ கிராம் வரை) 16 முதல் 24 அங்குல நீளம் கொண்டது. இதன் பெயர் அதன் நீளமான, கூர்மையான வடிவம் மற்றும் மஞ்சள் பட்டை மற்றும் வலுவான வாழைப்பழ வாசனையின் மூலம் ஒரு வாழைப்பழத்தை நினைவூட்டும்வகையில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இதன் மென்மையான சதை சால்மன் நிறமுடையது மற்றும் மிகவும் இனிமையான சுவை கொண்டது.[2] விவசாய கண்காட்சிகளில் அதிக கவனத்தை ஈர்ப்பதாக ஜேம்ஸ் ஜே.எச். கிரிகோரியின் பட்டியல்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

இருப்பு

தொகு

இத்தாவரத்தின் விதைகள் பல இணையவழி நிறுவனங்கள் மூலம் விற்கப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Banana Melon - Heirloom, Open-Pollinated, non-Hybrid Victory Seeds®". Victory Seeds.
  2. "Banana, Melon Seeds - Urban Farmer Seeds". Urban Farmer Seeds. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழை_முலாம்பழம்&oldid=3590589" இலிருந்து மீள்விக்கப்பட்டது