வாழ்வு சான்றிதழ்
வாழ்வு சான்றிதழ் (Certificate of Life or Proof of Life or Certificate of Existence or Letter of Existence) என்பது ஒரு நபர் தற்போதுவரை உயிருடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் சட்டப்படியான ஆவணம் ஆகும்.[1]. இந்தியாவில் இச்சான்றிதழ், மாநில, மத்திய அரசுகள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் உரியவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கேட்கப்படுகிறது.
ஓய்வூதியர்கள்
தொகுஇந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஓய்வூய்தியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திடம் நேரில் சென்று வாழ்வு சான்றிதழ் அளிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நேரில் செல்ல இயலாத வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியர்கள் உரிய அரசு அதிகாரிகளிடம் வாழ்வுச் சான்றிதழை சான்றிடப் பெற்று, ஓய்வூதியம் பட்டுவடா செய்யும் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.[2]
வெளிநாடுகளில் வாழம் ஓய்வூதியர்கள், தங்கள் நாட்டுத் தூதரகத்தின் மூலம் கடவுச்சீட்டு மற்றும் ஓய்வூதியச் சான்றுகளைக் ஆதாரமாகக் காட்டி, வாழ்வுச் சான்றிதழ் பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே இறந்து விட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவடா செய்வதைத் தவிர்க்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.[3]
வாழ்வுச் சான்றிதழ் வழங்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் பட்டுவடா செய்வதை, ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் நிறுத்திவிடும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Definition of certificate of existence[தொடர்பிழந்த இணைப்பு] Financial Times Lexicon, Financial Times Ltd., 2014. Retrieved 24 February 2010.
- ↑ http://pensionersportal.gov.in/forms/Declerationforms/p44.pdf
- ↑ House of Commons papers, Volume 28 , by Great Britain. Parliament. House of Commons, published by Office of Public Sector Information, 1848. Page 21
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1195705