வாழ்வோடு இயைந்த பாடல்கள்

நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாகும். நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடலின் பொருளாகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்

தொகு

தாலாட்டுப் பாடல்கள்

தொகு
  • தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கிய பரிசுதான் தாலாட்டு என்பார் தமிழண்ணல்.
  • தாலாட்டு - தால் + ஆட்டு. நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றிருக்க வேண்டும்.
  • மலையாளத்தில் தாராட்டு என்றும், தெலுங்கில் ஊஞ்சோதி என்றும், கன்னடத்தில் ஜோகுல் என்றும் கூறுவர்.

தாலாட்டின் பாடப்பொருள்

தொகு
  • குழந்தையைப் பற்றியன
  • குழந்தைக்குரிய கருவிகளைப் பற்றியது
  • குழந்தைகளின் உறவினரைப் பற்றியன என மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

குழந்தைகளுக்காக பாடும் பாடல்கள் குழந்தைப் பாடல்கள் எனப்படும். குழந்தை வளர்ச்சி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் மாறுபடுகின்றன.

குழந்தைப்பாடல்களின் வகைகள்

தொகு
  • விளையாட்டின் பொழுது பாடுவது
  • ஓய்வான பொழுது பாடுவது

காதல் பாடல்கள்

தொகு

அகத்தின்கண் மறைந்தும் புறத்தின்கண் புலப்படும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். இதைப்பற்றியும் பாடல்கள் உண்டு.

வகைகள்

தொகு
  • காதல்களே பாடுவது
  • காதலர்கள் அல்லதவர்கள் தொழில் செய்யும்போது காதல் பாட்டுகள் பாடுவது.

4) தொழில் பாடல்கள் இயற்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்பத்திக் கொள்ளும் செயலே பழங்காலத்தில் தொழில் எனக் கருதப்பட்டது.

தொழிற்பாடல்களின் வகைகள் 1) ஏற்றப்பாட்டு 2) படகுக்காரன் பாட்டு 3) மீனவர் பாடல் 4) வண்டிக்காரன் பாட்டு

5) கொண்டாட்டப் பாடல்கள் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பாடுவது கொண்டாட்டப் பாடல்கள் எனப்படும்.

வகைகள்

ஊஞ்சல், திருமணப்பால், நலுங்கு, வளைகாப்பு பாடல்கள்

6) பக்திப்பாடல்கள் இயற்கையின் ஆற்றலைக் கண்டு மனிதன் அஞ்சியதன் விளைவால் உருவானதே பக்திப் பாடல்கள் ஆகும். திருவிழா, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு மற்றும் இயற்கை வழிபாட்டுப்பாடல்கள்

7) ஒப்பாரிப் பாடல்கள் இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரி என்பர். வாழ்வின் முன்னரை தாராட்டு, முடிவுரை ஒப்பாரியாகும். ஒப்பு + அரி - ஒப்பாரி ஒப்பச் சொல்லி அழுதல் எனப் பொருள் தருகிறது.

வகை

பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல், இரங்கற்பா, காவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு எனப் பல்வகையாகக் கூறுவர்.

மேற்கோள் நூல்

தொகு
 1) தமிழண்ணல் - காதல் ஆய்வு 
 2) நாட்டுப்புற இயல் ஆய்வு - டாக்டர் சு. சக்திவேல்