வாவுபலி
குழித்துறை வாவுபலி பொருள்காட்சி குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி மாத அமாவாசையையொட்டி குழித்துறை ஆற்றங்கரையோரம் உள்ள வி.எல்.சி. மைதானத்தில் ஆண்டு தோறும் நடைபெறும்.
வரலாறு
தொகுவாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.
குழித்துறை வாவுபலி பொருள்காட்சி ஆற்றின் கரையோரம் உள்ள குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான மைதானத்தில் 20 நாட்கள் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படும். பொருள்காட்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருள்களை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். மேலும் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை தவிர ராட்சத ராட்டினம், மேஜிக் உள்பட பல்வேறு பக்க காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
ஆதாரங்கள்
தொகுhttps://www.onlinekanyakumari.com/kuzhithurai-vavubali-exhibition-2019-vavubhali/
https://www.dinamalar.com/news_detail.asp?id=62404
https://www.maalaithendral.com/2015/04/kuzhithurai-vavubali-porutkatchi.html பரணிடப்பட்டது 2021-01-19 at the வந்தவழி இயந்திரம்