வாஷிங்டனில் திருமணம் (நூல்)
(வாஷிங்டனில் திருமணம் (நகைச்சுவைக் கதை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாஷிங்டனில் திருமணம் என்பது எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. இந்தக் கதையானது ஒரு நகைச்சுவைத் தொடராக ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியானது. வாரம் ஒரு அத்தியாயம் எனும் கணக்கில் மொத்தம் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது.
இந்தக் கதையை நர்மதா பதிப்பகம் நூல் வடிவில் வெளியிட்டுள்ளது.
கதைச் சுருக்கம்
தொகுராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதனை சாவி நகைச்சுவையாக எழுதியிருந்தார். [1]
பெற்ற சிறப்புகள்
தொகு- கோவை பத்து என்பவர் இக்கதையை ஒரு மேடை நாடகமாக அரங்கேற்றினார். இந்த நாடகம் 500 தடவைகளுக்கு மேலாக நடிக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 GUDIPOODI SRIHARI (12 டிசம்பர் 2013). "Tragedy and comedy staged". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/theatre/tragedy-and-comedy-staged/article5451889.ece. பார்த்த நாள்: 3 நவம்பர் 2016.
உசாத்துணை
தொகு- புத்தக வடிவில் நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ள வாஷிங்டனில் திருமணம் எனும் நூல். பதிப்பு: மார்ச் 2013.