வாஷிங்டன் ஷெப்பில்டு
வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் வேதியலாளர் உலகின் முதல் நவீன பற்பசையையும், அதனை அடைக்கும் மடக்குக் குழாய்களையும் தயாரித்தவர். இயற்கையாகக் கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளைக் கொண்டு தனது 23 ஆம் வயதில் பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பம் (Creme Dentifrice) ஒன்றை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்குக் குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.[1] இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பற்பசை தயாரித்து மடக்கு குழாய்களில் அடைத்து கோல்கேட் டூத்பேஸ்ட் என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது.[2] இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குக் குழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
உசாத்துணை
தொகு- Garfield, Sydney. Teeth Teeth Teeth. Simon and Schuster, 1969.
- How Products are Made, ©2002 Gale Cengage.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://blog.news- பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் record.com/staff/architecture/2005/12/readers_have_po.shtml
- ↑ http://www.newyorker.com/archive/1960/08/06/1960_08_06_020_TNY_CARDS_000262427
வெளியிணைப்புகள்
தொகு- http://www.fluoride-history.de/p-dentifrice.htm
- Colgate-Palmolive. 1996. http://www.colgate.com/(July[தொடர்பிழந்த இணைப்பு] 9, 1997).
- http://www.pg.com/docYourhome/docCrest/directory_map.htm 1 (July 9, 1997).
- http://www.enotes.com/toothpaste-reference/toothpaste
- http://stevehollier.wordpress.com/2011/05/22/on-this-day-in-1892-toothpaste-in-a-tube-was-patented/