விகாரம் (பகுபத உறுப்பு)

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

தனிச்சொல்லில் உள்ள உறுப்புக்களைப் பகுபத உறுப்புக்கள் என்று நன்னூல் பகுத்துக் காட்டுகிறது. அது காட்டும் ஆறு உறுப்புக்களில் ஒன்று விகாரம். இயல்பு மாற்றத்தை விகாரம் என்பர். [1]

பகுபத உறுப்புக்கள் ஆறில் பகுதி, சந்தி, இடைநிலை ஆகிய மூன்று உறுப்புக்களில் நிகழும்.

எடுத்துக்காட்டு
  • கண்டான் = காண்(கண்) + ட் + ஆன். இதில் காண் என்னும் பகுதி கண் என விகாரமாயிற்று.
  • செத்தான் = சா(செ) + த் + த் + ஆன். இதில் சா என்னும் பகுதி செ என விகாரமாயிற்று.
  • சேர்த்தான் = சேர் + ந்(த்) + த் + ஆன். இதில் ந் என்னும் சந்தி விகாரமாயிற்று. [2]
  • எழுதிய = எழுது + ய்(இன்) + அ [3]

அடிக்குறிப்பு

தொகு
  1. விகார மனைத்து மேவல தியல்பே. (நன்னூல் 153)
  2. சேர்ந்தான் என்பது தன்வினை. சேர்த்தான் என்பது பிறிதின் வினை. இரண்டுமே இறந்த காலம் காட்டும் தகர ஒற்றுக்கு ஏற்பவே சந்தி எழுத்துக்களைப் பெற்றுள்ளன. எனவே இதனை விகாரம் எனக் கொள்ளலாகாது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
  3. எழுது - பகுதி, இன் என்னும் இறந்த கால இடைநிலை ய் என விகாரமாயிற்று. அ - பெயரெச்ச விகுதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாரம்_(பகுபத_உறுப்பு)&oldid=1562154" இலிருந்து மீள்விக்கப்பட்டது