விக்கிப்பீடியா:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013

குறிப்பு: தற்போது வகைப்படுத்தி தொகுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. முழுமை பெற வில்லை. இறுதி வடிவமும் இல்லை:

பரப்புரை

தொகு
  • தொழில்நேர்த்தி மிக்க பயிற்சி நிகழ்படங்கள் - இது மேலே செகதீசுவரன் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ள சிறப்பான பரிந்துரை. நாமாகவே இதைச் செய்து முடிக்க காலம் ஆகும். தொழில்நேர்த்தியும் அவ்வளவாக இருக்காது. உள்ளடக்கத்தைச் சேர்க்கும் முதன்மை நோக்கத்தில் கவனம் செலுத்தி, எஞ்சிய இடங்களில் தொழில்முறை உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • பரப்புரையாக சிறிய பிரசுரம் அடித்து தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பலாம். முதலில் முதல்வரின் அனுமதி பின் அவருக்கு தேவையான அளவு சிறிய பிரசுரம் அனுப்பலாம். இதற்கு ஆகும் பணத்தை கேட்கலாம் (பிரசுரம் அச்சடிப்பதற்கும் அஞ்சலுக்கும் பெரும் பணம் செலவாகும்).
  • நடமாடும் பரப்புரை: ஒரு முழு நேர விக்கியூடக/சக தன்னார்வத் திட்ட Outreach ஊழியர். பணி ஊர் ஊராகச் சென்று தமிழ் இணையம், தட்டச்சு, தமிழ் விக்கியூடகங்கள், சக திட்டங்களை அறிமுகப்படுத்தல்.

பங்களிப்பாளர் கட்டமைப்பு

தொகு
  • கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டுத் திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பத் தேவைகளை இனங்கண்டு அவற்றில் பணி புரியும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல். இவர்களுக்கு நாம் தொழில்நுட்ப வழிகாட்டல் மட்டும் தரலாம்.
  • பங்களிப்பாளர் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி - பங்களிப்பாளர்கள் இன்னும் சிறப்பாகப் பங்களிக்க புதிய கருவிகளைப் பெற வேண்டி இருந்தால் அதற்கான நிதியை ஒதுக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, scanner, படம்பிடி கருவிகள், கணினிகள் முதலியன. மாணவர்களுக்கும் வருவாய் வாய்ப்பில்லாதவர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.
  • பங்களிப்பாளர் வலைப்பின்னல் நிதி - தமிழ் விக்கிப்பீடியா வளர பல்வேறு மட்டங்களிலும் நமக்கு கூட்டாளிகள் தேவை. அதற்குத் தமிழ் விக்கிப்பீடியா தவிர்த்தும் பிற களங்களிலும் நாம் இயங்கி நட்புகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியர் ஒருவர் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகிறார் என்றால் அதற்கான உணவு, போக்குவரத்து, தங்கும் செலவுகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு விக்கிப்பீடியர் ஆண்டுக்கு 4 முறை மட்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

பயிற்சிகள்

தொகு
  • அத்துடன் ஆர்வத்துடன் செயற்படும் பயனர்களுக்குப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் முறையான பயிற்சிகளை அளிப்பதும் பயன்தரும். எடுத்துக்காட்டாக, கணினி தொடர்பான பயிற்சிகளோடு, ஒளிப்படப் பயிற்சி, கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி, நல்ல தமிழ் எழுதுவதற்கான பயிற்சி, தகவல் திரட்டுவதற்கான பயிற்சி, காப்புரிமை தொடர்பான பயிற்சி, போன்ற பயிற்சிகளை ஒழுங்கு செய்யலாம். நேரடியான பயிற்சிகள் தவிர கூடிய பயனர்களை அடையக்கூடிய "வெபினார்"களை ஒழுங்குபடுத்துவதற்கும், பயிற்சி நிகழ்படங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கும் பணம் ஒதுக்கலாம்.
  • பங்களிப்பாளர் திறன் வளர்ப்பு வளங்கள் - மொழி நடைக் கையேடு போன்ற தேர்ந்தெடுத்த நல்ல அச்சு நூல்களை முனைப்பான பங்களிப்பாளர்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கலாம். நிரலாக்கம், வரைகலை போன்ற குறிப்பிட்ட துறைகளில் தங்கள் திறன்களை மேம்படுத்த விரும்புவோருக்கு அதற்கான பயிற்சிக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

பங்களிப்பை ஏதுவாக்கல்

தொகு
  • விக்கிப்பீடியாவை கணினி பயன்படுத்தாத மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடுதல். இதற்கு பரந்த விளம்பர யுத்திகளும், முறையான பயிற்சிப் பட்டரைகளும் தேவையுரும். மிகுந்த சிரமமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.இருப்பினும் கணினி குறித்தான எவ்வித அறிவும் இல்லாத பல சிறந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வளர்கள் போன்றோரை பயன்படுத்திக் கொள்ள உதவும். (இதற்கே நிதி போதுமா என்று தெரியவில்லை, இன்னும் பெரிய அளவு விக்கி வளர்ந்த பின்பு கூட இதனைப் பற்றி யோசிக்கலாம்) நன்றி.
  • இணைய வசதியை மிகவும் ஏழைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடிய திட்டங்களுடன் இணைந்து செயலாற்றுதல்

உள்ளடக்க விரிவாக்கம்

தொகு
  • போட்டிகள்: போட்டிகள் நடத்துவதும் ஓரளவு பயன் தருவதாகத் தெரிவதால், பயன்தரக்கூடிய போட்டிகளை நடத்திப் பயனர்களை ஊக்குவிக்கலாம். ஏற்கெனவே விக்கிப்பீடியா, பொதுவகம் போன்றவை பயன்பெறக்கூடிய வகையில் போட்டிகளை நடத்திய அனுபவம் நமக்கு உண்டு. விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கிச்செய்தி என்பவற்றுக்கும் போட்டிகளை விரிவாக்குவது நல்லது.
  • மாநிலம் தழுவிய தட்டச்சுப் பந்தயம் - தமிழ்த் தட்டச்சு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய மாபெரும் போட்டியை நடத்தலாம். வெளிநாடுகளில் ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் போட்டிகள் உண்டு. இதற்கென நிகழ்ச்சி நடத்தும் கூட்டாளிகளை இனங்கண்டு பொறுப்பைத் தரலாம். பரிசை மட்டும் நாம் வழங்கலாம்.

வெளியீடுகள்

தொகு
  • குறுந்தட்டு வெளியீடுகள்
  • கையேடுகள் வெளியீடுகள்
  • (சிறு) நூல்கள் வெளியீடுகள்
  • தமிழ் விக்கியூடகப் பதிப்பகம் - இது ஆண்டுக்கு நான்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும். ஒரு காலாண்டுக்கு ஒன்று. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தமிழ் விக்கி நூல்கள், அச்சில் இல்லாத தமிழ் விக்கிமூல நூல்கள் முதலியன இவற்றுள் அடங்கும். உள்ளடக்கத்தைக் காசு கொடுத்துச் சேர்க்கத் தேவையில்லை. ஆனால், இருக்கிற உள்ளடக்கத்தை அச்சுக்கு ஏற்றவாறு கொண்டு வர தொழில்முறை தொகுப்பாசிரியர்களைப் பயன்படுத்தலாம். அச்சிடல், தொகுப்பு, வடிவமைப்பு, புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கும் செலவு, இவற்றைப் பொறுப்பெடுத்துச் செய்பவர்களுக்கான அப்போதைய நடைமுறைச் செலவுகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கலாம். இதில் முழு நேரப் பணியாளரோ நமக்கு என்று ஒரு அலுவலகமோ இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இணையத்துக்கு வெளியே உள்ள மக்களைச் சென்று சேர்தல், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களின் உள்ளடக்கத் தரத்தைக் கூட்டுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். நூல் விற்பனையில் கிடைக்கும் நிதி மீண்டும் இத்திட்டத்திலேயே சேர்க்கப்படும்.

நுட்ப/மொழிக் கருவிகள்

தொகு
  • மொழிபெயர்ப்புக் கருவிகள்: இணைப்புத் தந்துள்ள பக்கத்தில் இருப்பதற்கு இணங்க ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்குமான மொழிபெயர்ப்புகளுக்குத் தேவையான கருவிகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகளுக்கு ஓரளவு பணத்தைச் செலவு செய்வது பயனுள்ளது. இது கட்டுரை உருவாக்கத்தில் கூடிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

GLAM முன்னெடுப்புகள்

தொகு
  • அரசுகள் வெளியிட்ட கலைக்களஞ்சிய, அகரமுதலி உள்ளடக்கங்களை முறையே விக்கிப்பீடியா, விக்சனரியில் ஆகியவற்றில் சேர்த்தல், குறிப்பாக தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்).

ஆவணப்படுத்தல்/விக்கித் தரவுகள்

தொகு
  • Integrated and Universal Database and repository of All Indian Knowledge-ware - தமிழ் பகுதியை நிறைவேற்றல்
  • விக்கித் தரவுகள்: எ.கா பகுப்பு:2013 தமிழ் படைப்புகள் - சீரமைத்தல், தரவுத்தளங்கள் உருவாக்கல். (We need information about books, movies, events, conferences as structured, linked, open data so that we can use them in multiple platforms. This will eliminate work duplication.)