விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 27, 2013
ஆஸ்கார் வைல்டு ஓர் ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். ஓவியம்: நெப்போலியன் சரோனி |