விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 31, 2010
மலேசியா, கோலாலம்பூரிலுள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்கள் ஆகும். அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். இது சீசர் பெல்லி என்னும் கட்டடக்கலைஞரால் 1998ல் வடிவமைக்கப்பட்டது. பெரும்பாலும் துருப்பிடியா உருக்கையும், கண்ணாடியையும் உபயோகித்துக் கட்டப்பட்ட 88 மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம், மலேசியாவின் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடியதாக, இசுலாமியக் கலையில் காணப்படும் வடிவங்களுடன் ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைப்புரீதியான உச்சியைக் கொண்டிருப்பதுடன், உச்சியிலமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடியைத் தொடுகின்றன. |