விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 22, 2010
ரிப்பன் கட்டிடம் சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இந்த கட்டிடம் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கட்டிடத்தைத் தொன்மை மாறாமல் கலையம்சத்தை பேணும் வகையில் முழுமையாக புதுப்பிக்கும் பணி ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் நடைபெறுகிறது. |