விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 29, 2010
இரோசிமா சமாதான நினைவகத்தின் அகல் பரப்புத் தொடர் காட்சி. இது சப்பானின் இரோசிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது 1945, ஆகத்து 6 இல் ஐக்கிய அமெரிக்கா இந்த நகரத்தின் மீது சின்னப் பையன் எனப் பெயரிடப்பட்ட முதலாவது அணுகுண்டைப் போட்டது. 70,000 பேர் இதன் போது கொல்லப்பட்டனர். இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது.. |