விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 14, 2011
பிளாட்டினம் ஒரு வேதியியல் தனிமம். இதனைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய எடைமிகுந்த உலோகம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யவும் மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும் தானுந்துகளில் இருந்து வெளியேறும் வாயுக்களிலுள்ள சூழலுக்குக் கேடு தரும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும் இது பயன்படுகின்றது. படத்தில் உருக்கித் திண்மமாக்கப்பட்ட பிளாட்டினம் காட்டப்பட்டுள்ளது. |