விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 12, 2010
தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலம். இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன. தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர். |