விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 24, 2011
செவ்வாய் சூரியக் குடும்பத்திலுள்ள நான்காவது கோள் ஆகும். இது சிவப்புக் கோள் என்றும் அழைக்கப்படுகிறது. நாசாவின் மரைனர்-4 எனும் விண்கலம் முதன்முதலில் செவ்வாய்ப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. அதன்பின்னர் சோவியத் ஒன்றியம் மட்டுமே வெற்றிகரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முயற்சி 2004ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. வருங்காலத்தில் பல நாடுகள் செவ்வாய்க்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டம் வகுத்துள்ளன. படத்தில் காட்டப்பட்டுள்ளது செவ்வாயின் குசேவ் கிரேட்டர் எனுமிடத்திலிருந்து மே 19, 2005 அன்று ஸ்பிரிட் விண்கலத்தால் எடுக்கப்பட்டச் சூரிய மறைவுக் காட்சி. |