விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 19, 2014
மீக்கடத்துத்திறன் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் கடத்திகள் சுழிய மின்தடையுடன் மின்னோட்டத்தைக் கடத்தும் தன்மை ஆகும். இவ்வாறு கடத்தும் பொருள்கள் மீக்கடத்திகள் என்றறியப்படுகின்றன. மீக்கடத்திகள் குறைந்த வெப்பநிலையில் இருக்கையில் அவற்றின் மீது வைக்கப்படும் காந்தத்தின் காந்தப்புலத்தை விலக்கி அதனை மேலே தூக்கும் மெய்ஸ்னர் விளைவு படத்தில் காட்டப்பட்டுள்ளது. படம்: Mai-Linh Doan |