விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 8, 2012
அலகு குத்துதல் என்பது இந்துக் கோவில் திருவிழாக்களில் பால்குடம், காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். பக்தரின் வாயில் ஒருமுனையில் குத்தப்படும் இந்தக் கூரிய உலோக ஊசி மறுமுனை வழியே வேகமாக இழுக்கப்படும். ஊசியின் கூர் முனைக்கு எதிர்முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி நாக்கலகு குத்துவதுமுண்டு. படத்தில் அலகு குத்தித் தெருவில் வலம் வரும் பக்தர். |