விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 9, 2011

{{{texttitle}}}

பனி மந்தி என்றழைக்கப்படும் சப்பானிய மக்காக்கு சப்பான் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் குரங்கு. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே வடமுனைக்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும். படத்தில் சப்பானின் நகானோ நகரில் உள்ள சிக்கோகுடானி வெந்நீரூற்றில் பனி மந்திகள் குளிக்கும் காட்சி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்