விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 13, 2012
முப்பிரிவுகள் விதி என்பது ஓவியம், புகைப்படம் ஆகியவற்றில் கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும். ஒரு படத்தினைக் குறுக்கு நெடுக்கான இரு கோடுகள் மூலம் 9 சமமான பாகங்களாகப் பிரிக்கலாம் இதனால் கிடைக்கும் 4 வெட்டுப்புள்ளிகளும் அந்தப் படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இவை குறிக்கின்றன. இதுவே முப்பிரிவுகள் விதியாகும். இதன்படி எடுக்கப்பட்ட படம் ஒன்று கோடுகளோடும் கோடுகளின்றியும் அசைபடமாகக் காட்டப்பட்டுள்ளது. அசைபடம்: மூன்டிக்கர் |