விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 22, 2014
ரொசெட்டா கல் என்பது ஒரே பத்தியை பட எழுத்தை உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக்கடற் துறைமுகமான ரொசெட்டாவில், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. படம்: ஹான்ஸ் ஹிலேவேர்ட் |