விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 14, 2011
வெள்ளை மாளிகை அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் ஆகும். இது வாசிங்டன் டி. சி.யில் அமைந்துள்ளது. இது நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையில் அமைந்த மணற்கல் மாளிகையாகும். 1812ஆம் ஆண்டு போரின் போது இதன் சுற்றுச் சுவர் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இது புதியதாகக் கட்டப்பட்டது. படத்தில் வெள்ளை மாளிகையின் தெற்கு நோக்கிய தோற்றம் காட்டப்பட்டுள்ளது. |