விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2018
ஓநாய் சிலந்தி என்பது லைக்கோசிடே குடும்பத்தைச் சார்ந்த சிலந்தி வகையாகும். இவை வலிமையான, சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும், தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. |