விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 6, 2008
தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு கலையாகும். தெய்யம் என்பது தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப் படும் வேண்டுதல். இந்த ஆட்டக்கலை தெய்யாட்டம் எனவும் தெய்யத்தின் வேடத்தை தெய்யக்கோலம் என்றும் வழங்குகிறார்கள். |